மன்னாரில் அரச அதிகாரிகளினால் கைவிடப்பட்ட கண்டல் காடு!! (PHOTOS, VIDEOS)
மன்னார் எருக்கலம்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்ட கண்டல் காடு!!
இலங்கையைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 8800 ஹெக்டயர் நிலப்பரப்பில் கண்டல் தாவரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. கண்டல் தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் குறைப்பதிலும் மற்றும் சூழலில் அதன் தாக்கத்தைக் குறைப்பதிலும் பாரிய செல்வாக்குச் செலுத்தும் ஒரு தாவர இனமாகும். கண்டல் காடுகள் பல்வேறு வழிகளிலும் மக்களுக்கும் இயற்கைக்கும் உதவுகின்றது. கண்டல் காடுகளை அண்டிய பகுதிகளில் அதிகளாவன மீன் இனங்கள் நண்டு மற்றும் இறால் போன்றவையும் வாழ்கின்றன. இவை அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவதுடன் கண்டல் தாவரங்களை அண்டி வாழும் மீனினங்கள் பவளப்பாறைகளை உருவாக்கும் செயற்பாட்டிலும் ஈடுபடுவதால் கண்டல் காடுகள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய நன்மையாக விளங்குகின்றது.
மன்னார் மாவட்டமானது சுற்றுலாவிருந்தோம்பலில் சிறப்புவாய்ந்த இடமாகக் காணப்படுகின்றது. தொண்டமனாறு தொடக்கம் கல்பிட்டி சிலாபம் வரை கண்டலுக்கான வரலாறுகளையும் கொண்டுள்ளது. ஆதிகாலத்தில் இருந்து மனிதன் இந்த சூழல் தொகுதிக்கு தீங்கு விளைவிக்காமல் நிறைய நன்மைகளைப்பெற்று வந்தான். ஆனால் நவீன கால மனிதன் பல்வேறு தீமைகளை இச்சூழல் தொகுதிக்கு செய்து அதன் மூலம் நன்மைகளைப்பெற்று வருகிறான். உணவு மற்றும் உபகரண உற்பத்திகள் ஆக்ரோஸ்ரிக்கத்தின் இளந்தளிர்கள் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கண்டல் தாவரங்களின் தளிர்கள் பெருமளவில் கரையோர மக்களால் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் கண்டல் மரங்கள் கட்டடப் பணிகளுக்கும் கம்பாகவும் றைசோபோறா, புறுகைறா, அபிசினியா போன்றவற்றில் இருந்து பெறப்படும். வெட்டுமரங்கள் படகு கட்டவும் மீன்பிடி உபகரணங்கள் செய்யவும் பயன்படுகின்றன. [இவை சட்டவிரோதமானவை]
மன்னார் மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கண்டல் தாவரங்கள் பெருமளவில் அகற்றப்பட்டது. யுத்ததின் பின் மன்னார் மாவட்டத்தில் கண்டல்தாவரங்கள் பாரிய அளவில் சேதமாக்கப்படுவதும் வெட்டப்படுவதும் அல்லது எருக்கலம்பிட்டி கண்டல் பிரதேசங்களை ஆக்கிரமித்து செயற்படுத்தப்படும் பண்னைகளும் அப்பண்னைகளினால் வெளியேற்றப்படும் இரசாயனக்கழிவுகளினால் கரையோரக் கடல் மற்றும் கண்டல் இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கண்டல் மீள நடுதல் என்பது கண்டல் தாவர அழிப்புக்கு தீர்வாகாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
எருக்கலம்பிட்டியில் காணப்படும் கண்டல் காடு 50 தொடக்கம் 80 வருட வயது கொண்ட கண்டல் தாவரங்கள் மிக உயர்வன சுற்றுலாப்பிரதேசம் பண்னையினால் வெளிவிடப்படும் இரசாயனத்தினால் இன்று சேதமாக்கப்படுகின்றது.
மன்னாரில் பெருமளவு கடலோரப்பகுதி கண்டல்கள் தாழைகளைக் கொண்டவை. அத்துடன் இப்பிரதேசங்களில் கடல் முலிகைகளும் காணப்படுகின்றமை முக்கியமானது. வங்காலை கண்டல் காடு கல்பிட்டி அச்சங்குளம் எருக்கலம்பிட்டி விடத்தல் தீவினது தொடர்ச்சியே என்பதனையும் அடையாளப்படுத்தப்படாத கண்டல் பிரதேசங்களில் உள்ள கண்டல் தாவரங்களுக்கும் கண்டல் தாவர சட்டங்களுக்கு உட்பட்டவையே.
கண்டலுக்கு கீழ் உள்ள மூலிகைகளும் அழிவடைந்து கொண்டுள்ளது.
கண்டல் தாவரங்கள் சூழலை மாசுபடுத்தும் காரணிகளை உரிஞ்சும் தன்மை உடையதாக காணப்படுகிறது. இதனால் வாவிகளின் மாசுபடலைக் குறைக்கின்றது. கண்டல் காடுகளில் இருக்கும் பறவை, விலங்குகளை இரசித்து பொழுது போக்கும் இடமாகவும் காணப்படுகிறது. அத்துடன் பெருமளவான உல்லாசப் பயணிகளை கவரும் இடமாகவும் பெருமளவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் காணப்படுகிறது. அத்துடன் உள்நாட்டுப் பறவைகள் விலங்குகள் வெளிநாட்டுப்பறவைகள் விலங்குகளின் புகழிடமாகவும் தொழிற்படுகிறது. இவை உயிரினப் பல்வகமையைப் பேணுவதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மன்னாரினை பொறுத்தவரை பாரியளவிலான பறவைகள் பார்வையாளர்கள் மாவட்டத்திற்கு வருவதும் அது தொடர்பான சுற்றுலா துறைக்கு பங்களிப்பு வழங்குகின்றமையும் முக்கியமானது. பறவைகளின் வசிப்பிடமாக இவ் கண்டல் தாழை காடுகள் காணப்படுகின்றது.
கண்டல் தாவரங்கள் சூழல் மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் காணப்படுவதால் அதனைப் பல்வேறுபட்ட அழிவுகளிலிருந்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய பொறுப்பாகும். இது பற்றி மக்கள் தெளிவு பெறுவதன் மூலமாக இயற்கை பொக்கிஷங்களையும் அழகாகப் பாதுகாத்துக் கொள்ள முடியும். சதுப்பு நில மரங்களை சுத்தம் செய்து பாதுகாத்து பயன்பெற வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ள அச்சங்குளம் கண்டல் காடு மற்றும் அச்சங்குளம் சதுர்ப்பு நிலம்
உவர் சேற்றுப்பங்கான சூழல் தொகுதிகளில் வாழ்வதற்கான இசைவாக்கங்கள் கொண்ட தாவரங்கள் கண்டல் தாவரங்கள் என்று மிக எளிமையாகக் கூறலாம். தாழை போன்ற உவர் சேற்று வளரித் தாவரங்களிலும் இவ்வாறான சில விசேட இசைவாக்கங்கள் உள்ளன. கண்டல் தாவரங்களை ஆங்கிலத்தில் மாங்குறோவ் [Mangrove]என்று அழைப்பார்கள். கண்டல் தொகுதியில் உயிர்பல்வகைமை உயர்மட்டத்தில் காணப்படுகின்றது. இச்சூழலில் ஏராளமான வகைகளில் தாவரங்கள் விலங்குகள் என்பன காணப்படுகின்றன. கண்டல் சூழல் அதிகளவான தாவரங்களைக் கொண்டிருப்பதால் உயர்ந்த உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. அத்துடன் இறந்த தாவர விலங்கு உடல்கள் கண்டல் தொகுதியில் சேர்ந்து மிகவும் வளம் கொண்ட சூழல் தொகுதியாகவும் உள்ளது.
அலையாத்திக்காடுகள், வெள்ளக்காடுகள், கடலோரக் காடுகள், மீன் வளக்காடுகள், வண்டல் பாடுகள், பறவைக்காடுகள் என பலவகையாகக் காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் கரையோரப்பகுதிகளில் காணப்படும் களப்பு கழிமுகங்கள் கடல்நீரேரிகள் குடாக்கள் முனைகள் நன்நீர் மற்றும் கடல்நீர் இணையும் இடங்களில் கண்டல் காடுகள் அதிகம் காணப்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் கண்டல் தாவரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு அரச அதிகாரிகள் மட்டத்தில் குறைவாகக் காணப்படுவதும் விழிப்புணர்வினை பெற விரும்பாமையும் காரணமாக பல வருடங்கள் வயதினைக் கொண்ட கண்டல் தாவரங்களை நாம் இழக்கவேண்டிய துப்பாக்கிய நிலையிற்கு தள்ளப்பட்டுள்ளமை வேதனைக்குறிய விடயமாகும். அத்துடன் போர் சூழலுக்குப்பின்னரான அடையாளப்படுத்தல்களில் ஏற்பட்ட தளம்பல்களும் இதற்கு காரணம் எனினும் கண்டல் தொடர்பான சட்டங்கள் ஊடாக அவற்றினை பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் மாவட்ட அரச உயர் அதிகாரிகளால் பேணப்படாத கண்டல் காடுகளால் மீனவர்களது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)
மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)