ஜெலென்ஸ்கியில் அதிரடி முடிவு – திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்ட உக்ரைனிய உயர் அதிகாரிகள்!!
உக்ரைனில் ஊழல் மோசடியில் சம்மந்தப்பட்ட பிராந்திய இராணுவ ஆட்சேர்ப்பு மையங்களுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளையும் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
போர்க்காலப் பொருட்களை வாங்குவது தொடர்பிலான ஊழல் விவகாரத்திலேயே இந்த பதவி நீக்கம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், மொத்தத்தில் இராணுவ பதிவு மற்றும் சேர்க்கை அலுவலகங்களின் அதிகாரிகளுக்கு எதிராக 112 குற்றவியல் நடவடிக்கைகள் உள்ளன.
அவற்றில், “சட்டவிரோத செறிவூட்டல், சட்டவிரோதமாக பெறப்பட்ட நிதிகளை சட்டப்பூர்வமாக்குதல், சட்டவிரோத நன்மை, எல்லைக்கு அப்பால் இராணுவ சேவைக்கு பொறுப்பான நபர்களின் சட்டவிரோத போக்குவரத்து” போன்றவை முக்கியமானவை.
இவ்வாறு செய்யும் அனைத்து பிராந்திய இராணுவ அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்வதே முடிவு என்று கூறினார்.
மேலும், நாம் செய்யும் போர் என்றால் என்ன என்பதையும் போரின் போது லஞ்சம் கொடுப்பது தேசத்துரோகம் என்பதையும் சரியாக அறிந்தவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.