அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதி வீட்டில் இருந்து 47 துப்பாக்கிகள் பறிமுதல்!!
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் அனஷிம்ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் ஜெப்ரி பெர்குசன் ( வயது 72).நீதிபதியாக உள்ளார்.இவரது மனைவி ஷெர்லி பெர்குசன். இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெப்ரி பெர்குசன் துப்பாக்கியால் மனைவியை சரமாரியாக சுட்டார். இதில் குண்டு பாய்ந்த ஷெர்லி இறந்தார்.இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் நீதிபதி ஜெப்ரி பெர்குசனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் ஏன் மனைவியை சுட்டக்கொன்றார் என தெரியவில்லை. போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு 47 துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. அந்த துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நீதிபதியிடம் இத்தனை துப்பாக்கிகள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இந்த வழக்கில் கைதான நீதிபதி ஜெப்ரி பெர்கு சனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.