அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “புங்குடுதீவு சுவிஸ் உறவுகளின்” அன்னதான நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “புங்குடுதீவு சுவிஸ் உறவுகளின்” அன்னதான நிகழ்வு..
##########################
ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு புங்குடுதீவு நான்காம், ஆறாம் வட்டாரமான இறுப்பிட்டியைச் சேர்ந்த அமரர்களான திரு.செல்லையா பாலசிங்கம் திருமதி.பாலசிங்கம் நாகம்மா ஆகியோரின் நினைவாக அவர்களின் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் சார்பாக திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் இன்று மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் அன்னதான நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது.
நாட்டில் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் இக்கட்டான நிலையில் வாழும் குடும்பங்களுக்கு தங்களது தாய், தந்தையரை நினைவு கூர்ந்து ஆடி அமாவாசை விரதநாள் தானமாக “அன்னதானம்” வழங்கி வைக்கும்படி,
சுவிஸ் பேர்ண் புர்கடோர்ப் என்னுமிடத்தில் வசிக்கும் திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் அமரர்களான திரு.செல்லையா பாலசிங்கம், திருமதி.பாலசிங்கம் நாகம்மா, ஆகியோரின் நினைவாகவும், அமரர்களான அனைத்து உறவுகளின் தாய், தந்தையின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அவர்களின் நினைவாகவும் வவுனியா பாலாமைல்கள் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட ஆத்ம சாந்தி பூசையுடன், ஆடி அமாவாசை விரதநாள் தானமாக “விசேட அன்னதானம்” மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பல்வேறு உதவிகளை கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக தமது குடும்பத்தின் சார்பில் ஏற்கனவே இவர்கள் வழங்கி வருபவர்கள் என்பதைக் குறிப்பிட்டுக் கூறிக் கொள்வதோடு, இன்றைய நிகழ்வுக்கும் நிதிப் பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்,
மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் உடனடியாக சுவிஸ்வாழ் புங்குடுதீவு தமிழுறவான சமய,சமூகத் தொண்டர்களான திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கு வழங்கிய நிதியில் மேற்படி விசேட அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு இன்று பாலாமைல்கள் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அமரர்களான திரு.செல்லையா பாலசிங்கம், திருமதி.பாலசிங்கம் நாகம்மா, ஆகியோரின் நினைவாக திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரும் சமூக சேவையாளருமான திறமை பவளராணி நவரட்ணம் அவர்களின் ஒழுங்கமைப்பிலும், தலைமையிலும் மாதர் சங்க செயலாளர் திரு.திருமதி. சி.கௌசல்யா, சமுர்த்தி தலைவி திரு.திருமதி.சி.ஜெயதேவி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் பாலாமைல்கள் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேடமான மோட்ஷ அட்ஷனை நடைபெற்று, பின்னர் மகேஸ்வர பூசையுடன், ஆலயத்தின் பிரதம குருக்களுக்கு தட்ஷனை வழங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் அமரர்களான திரு.செல்லையா பாலசிங்கம், திருமதி.பாலசிங்கம் நாகம்மா, ஆகியோரின் நினைவாக மேற்படி விசேட அன்னதான நிகழ்வில், முதலில் “அமரர்களான அனைவரதும் ஆத்மான சாந்தியடைய வேண்டி” தேவாரபாராயணம் பாடி பிரார்த்தித்ததுடன் அமரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆசி கூறினார்கள்.
பாடசாலை மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர் சிலர் உட்பட அக்கிராமப் பொதுமக்கள் சிலரென பெருமளவில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஷேட மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.
மேற்படி விசேட அன்னதான நிகழ்வில், மேற்படி விசேட அன்னதான நிகழ்வில், முதலில் “அமரர்களான அனைவரதும் ஆத்மான சாந்தியடைய வேண்டி” தேவாரபாராயணம் பாடி பிரார்த்தித்ததுடன் அமரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆசி கூறினார்கள்.
வேலணை, புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், சுவிஸில் பேர்ண் புர்கடோர்ப் இடத்தில் வசிக்கும் திரு.திருமதி. சுதாகரன் செல்வி தம்பதிகள் அமரர்கள் பாலசிங்கம் நாகம்மா ஆகியோரின் நினைவாகவும், அனைத்து உறவுகளின் நினைவாகவும் “ஆடி அமாவாசையை” முன்னிட்டு அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வழங்கிய மேற்படி உதவிகள்.. தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கியமை சிறப்பானது. இவ்வாறான காலத்திற்கேற்ப தங்களின் குடும்ப உறவுகளின் நினைவாக சமூகப்பங்களிப்பு செய்வது மிகவும் வரவேற்கத்தக்கது.
உதவி வழங்கிய சுவிஸ்வாழ் உறவான திரு.திருமதி. சுதாகரன் செல்வி குடும்பத்துக்கு, தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம்
அமரத்துவமடைந்த திரு.செல்லையா பாலசிங்கம், திருமதி. பாலசிங்கம் நாகம்மா, ஆகியோரின் ஆத்மசாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை தாயக உறவுகளோடு இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வேண்டி கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
15.08.2023
அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “புங்குடுதீவு சுவிஸ் உறவுகளின்” அன்னதான நிகழ்வு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos