;
Athirady Tamil News

சொல்லாட்சியை தாண்டி எப்போது பயணிப்பீர்கள்: இந்தியா- சீனா பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் விமர்சனம்!!

0

இந்தியா- சீனா இடையில் எல்லைக் கட்டுப்பாடு கோடு (LAC) தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். இதனால் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. பின்னர், பேச்சுவார்த்தைக்குப்பின் பதற்றம் தணிந்தது. இந்த சம்பவத்தின்போது சீன ராணுவம் இந்தியாவில் பல மைல் தூரம் நுழைந்து ஆக்கிரமித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்தியாவின் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது என மோடி அரசு தெரிவித்தது. எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பாக இந்தியா- சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.

என்றாலும், இந்தியப் பகுதியில் இருந்து சீனா வெளியேறவில்லை. இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய எல்லை கட்டுப்பாடு கோட்டை தவிர்த்து மற்ற பிரச்சினைகளை தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், சீனா ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை. இருதரப்பு பேச்சுவார்தை நேர்மறையாக, ஆக்கப்பூர்வமாக, ஆழமானதாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 19-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி.

பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சுர்ஜிவாலா கூறுகையில் ”கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில இருந்து தற்போது மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள் ஆகியும் முந்தைய நிலை திரும்பவில்லை. டெப்சாங் பகுதியில் இந்தியப் படைகள் 65 பாதுகாப்பு பாயிண்ட்களில் 26-ல் பாதுகாப்பை தொடர் முடியாது. சீனா, இந்தியாவில் உள்ள ஒய் ஜங்சன் என அழைக்கப்படும் பாட்டல்நெக்கில் இந்திய ராணுவத்தை தடுக்கிறது. சீன ராணுவம் வெட்கமின்றி ஆக்கிரமித்த நமது பகுதியில் இருந்து, எப்போது வெளியேற்றப்படுவார்கள்? 2020 ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலை எப்போது உருவாகும்.

அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது, இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி தெரிவித்தாரே, அதே நிலையில் இருக்கிறாரா? அல்லது நாட்டை தவறாக வழி நடத்தினாரா? சீனா இந்திய எல்லையை ஆக்கிரமிக்கவில்லை என்றால், ஏன் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள். எல்லையில் எப்போது முந்தைய நிலை திரும்பும். இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.