இத்தாலியில் வெள்ளப்பெருக்கினால் அச்சமடைந்துள்ள மக்கள்!
இத்தாலியின் வடமேற்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பார்டோனேச்சியா நகரில் ஓடும் மெர்டோவின் நதியில் கடும் வெள்ளப்பெருக்குடன் சேற்று சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக மலைப்பகுதியில் உள்ள ஓடை நிரம்பி, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 120 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதிஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது ஓர் மகிச்சிகரமான விடயமாகும்.
பருவநிலை மாற்றங்களால் பாரிய சேதங்களும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறது, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.