;
Athirady Tamil News

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..!

0

உணவு நஞ்சாதல் என்பது பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், நோய்வாய்ப்படாமல் இருக்க என்ன வகையான உணவுகளை உண்ணவேண்டும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர் கடந்த 30 ஆண்டுகளாக உணவு கலப்படத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி வருகிறார்.

ஈ.கோலை (E.coli), சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் பிற வகையான உணவு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் போராடி வருகிறார்.

அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றுள்ள `விஷம்: உங்கள் உணவைப் பற்றிய அசுத்தமான உண்மைகள்` (Poisoned: The Dirty Truth About Your Food) என்ற ஆவணப்படத்திலும் அவர் தோன்றியுள்ளார்.

கெட்டுப்போன உணவை உண்பதால் ஆண்டுக்கு 6 கோடி பேர் பாதிக்கப்படுவதோடு, 4,20,000 பேர் மரணிக்கின்றனர்.

நாம் எத்தகைய உணவை உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நமது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று பில் மார்லர் கூறுகிறார்.

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், உணவில் சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

பதப்படுத்தப்படாத பால், பால் பொருட்கள் மற்றும் ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஸ்டெஃபனியின் நோய்க்கு காரணமான ஈ.கோலி பாக்டீரியாவால் தொற்று ஏற்படும் அபாயத்தை இத்தகைய உணவு ஏற்படுத்தும்.

பாலை பச்சையாக குடிப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஒருசிலர் கருதினாலும் , அவற்றால் ஆபத்தே அதிகம்.

முளைகட்டிய பீன்ஸ்கள் பாக்டீரியா இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய உணவுப் பரவல் நோய்களுடன் இவை தொடர்புடையவை.

2011ஆம் ஆண்டில் வெந்தய விதைகளுடன் தொடர்புடைய பாதிப்பு ஒன்று ஜெர்மனியில் ஏற்பட்டது. இதனால் 900 பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதோடு 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .

இறைச்சியை தரையில் கிடத்தும்போதோ அல்லது அவற்றை துண்டு துண்டாக வெட்டும்போதோ, இறைச்சியின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியா உட்புறத்திலும் செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, இறைச்சியை முழுமையாக சமைக்க வேண்டியது அவசியம்.

மேலும், ஆரோக்கியமாக இருக்கும் உங்களை நோய்வாய்ப்படவைக்க அதிக பாக்டீரியாக்கள் தேவையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் உயிரை பறிப்பதற்கு வெறும் 50 ஈ.கோலை பாக்டீரியாக்களே போதும். ஊசி முனைப்போன்ற இடத்தில் கூட 1,00,000 ஈ.கோலை உள்ளன. அவற்றை உங்களாக பார்க்கவே, உணரவோ முடியாது.

எனவே, இறைச்சியை முழுமையாக சமைத்து உண்ணுவதே இதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரே வழி.

2006ஆம் ஆண்டுவாக்கில் கீரையுடன் தொடர்புடைய ஈ.கோலை பாக்டீரியா பாதிப்பு அதிகளவில் பரவத் தொடங்கியது.

அமெரிக்காவில் 200க்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் பேர் உயிரிழந்தனர்.

கலியோர்னியாவில் உள்ள ஒரு கீரைப் பண்ணைக்கும் பாக்டீரியா மாசுபாட்டுக்கும் தொடர்பு இருப்பது இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒருசில விலங்குகளின் மலம் போன்றவை காரணமாக கீரையில் ஈ.கோலை பாக்டீரியா ஏற்பட்டது தெரியவந்தது.

அந்த பண்ணையில் இருந்து கீரை அறுவடை செய்யப்பட்டு சுத்தப்படும் மையத்துக்கு அனுப்பப்பட்டது.

அங்கு மூன்று முறை கீரை கழுவப்பட்டது. இதனால் கீரை முழுவதிலும் பரவிய ஈ.கோலை, கீரையை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்த பிற பொருட்களிலும் பரவியது.

இது நாடு முழுவதும் பரவியது, இதனால் அதனை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர்.

மற்ற உணவுப் பொருட்களைப் போலவே கீரையும் பலர் கைகளில் மாறும்போது அது மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.