;
Athirady Tamil News

மதுபான விலைகளை குறைக்க வேண்டும் !!

0

மதுபானங்களில் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதனால் மக்கள் கசிப்பு காச்சி குடிக்க நேரிடும் என்பதுடன் போதை மாத்திரையை பயன்படுத்தும் நிலைமையும் ஏற்படும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுற்றுலா பயணிகள் இரவு 10 மணிக்கு பின்னர் உறங்குவதற்காக இந்த நாட்டுக்கு வருவதில்லை. இன்னும் இரவில் திறக்கப்படாது இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் 10 மணிக்கு பின்னர் உறங்கிவிடுகின்றனர்.

மாலைதீவு போன்ற நாடுகளில் இவ்வாறு இல்லை. சுற்றுலாத்துறையினருக்காக விசேட திட்டங்கள் உள்ளன. இப்போதுள்ள நிலைமையிலேயே சென்றால் இதுவரை காலம் கிடைத்த பெறுபேறே கிடைக்கும்.

இங்கே இரவு நேர பொருளாதாரம் முக்கியமாகும். இலங்கை உலக நாடுகளுடன் தொடர்புபட வேண்டும். இவ்வளவு அழகான நாட்டை இப்படி இரவில் பூட்டி வைப்பதால் பலனில்லை. உலக நாடுகளில் 70 சதவீதம் இரவு நேர பொருளாதாரம் உள்ளது. இது தொடர்பில் யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம்.

இரவு 10 மணிக்கு பின்னர் சுற்றுலா ஹோட்டல்களில் பார்கள் மூடப்படுகின்றன ஏன் இதற்கு மேல் திறந்து வைக்க முடியாது. இவற்றை மாற்ற வேண்டும்.

இதேவேளை மதுபானங்களில் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாராயத்தின் விலை அதிகமாக இருக்கின்றது. இதனால் மக்கள் கசிப்பு காச்சி குடிக்க நேரிடும். அத்துடன் போதை மாத்திரையை பயன்படுத்தும் நிலைமையும் ஏற்படும். இதனால் கலால் திணைக்களத்திற்கு வருமானமே இல்லாமல் போகும். இதனால் விலைகளை குறைக்க வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.