தூவானம் விருது விழாவும் கலைஞர் கெளரவிப்பும்!! (PHOTOS)
வைத்தியக்கலாநிதி சிவன்சுதனின் தயாரிப்பில், கலாநிதி.க. ரதிதரனின் இயக்கத்தில் உருவான ஈழத்திரைப்படம் தூவானம் யாழ்ப்பாணம் தொடக்கம் சர்வதேச நாடுகள் எங்கும் திரையிடப்பட்டு வருகின்றன.
இத் திரைப்படமானது திரையிடப்பட்டு வரும் நிலையில் தனது 100 ஆவது நாட்களையும் பல்லாயிரம் இரசிகைர்களையும் சந்தித்துள்ளது.
அந்த வகையில் 100ஆவது நாளின் கொண்டாட்ட விழா கடந்த 20.08.2023 அன்று மாலை 4.00மணி தொடக்கம் யாழ். பல்கலைக்கழக கலையரங்கில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக சிவன் ஆலயத்தில் விசேட பூஜைகளைத் தொடர்ந்து அதிதிகள் கலைஞர்கள் அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து பிரதம அதிதியான யாழ்..பல்கலை துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா மற்றும் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர், வைத்தியக்கலாநிதிகள்., கல்வி அதிகாரிகள் என பலரும் மங்கள விளக்கினை ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தூவானம் திரைப்படத்தில் பணி புரிந்த அத்தனை கலைஞர்களையும் கெளரவித்து சான்றிதழ்கள் விருதுகள் என்பனவும் வழங்கி கௌரவித்தனர். அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் இவ் நிகழ்வுகள் திறம்பட ஒழுங்கமைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.