அவுஸ்திரேலிய பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் – பெற்றோருக்கு அவசர அறிவிப்பு !!
தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள 15 பாடசாலைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல்கள் வந்ததையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்கும்படி பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து பாடசாலை ,மாணவர்களின் வரவு வீதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அனைத்து பாடசாலைகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து கிழக்கு அடிலெய்டு பாடசாலையின் முதல்வர் விக்கி ஸ்ட்ராவின்ஸ்கி கூறுகையில், “இன்று காலை பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் இருப்பதாக மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. “அது வெளியேற்றும் செயல்முறைகளுக்கு போதுமான நேரத்தை வழங்கியது.” என்றார்.
இந்த நிலையில், குறித்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.