பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு செல்ல தயாராகிறார் புடின் !!
சர்வதே குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் எந்தவொரு வெளிநாட்டிற்கும் செல்லாத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது சீனாவிற்கு செல்ல தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள பட்டுப்பாதை (Belt and Road)செயற்றிட்டத்தில் பங்குபற்றும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை புடின் ஏற்றுக்கொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புடின் தனது பாதுகாப்பு சேவை தனது பாதுகாப்பிற்கு முற்றிலும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய நாடுகளுக்கு மட்டுமே செல்ல தயாராக உள்ளார், மேலும் சீனாவும் அந்த இடங்களில் ஒன்றாகும் என மற்றுமொரு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வாரம், புடின் தென்னாபிரிக்காவில் நடந்த பிறிக்ஸ் உச்சிமாநாட்டைத் தவிர்த்தார், தென்னாபிரிக்க அரசாங்கம் சர்வதேச நீதிமன்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
எனினும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா கையொப்பமிடவில்லை என்றாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என புடின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.
இதேவேளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ரோம் சட்டத்தில் சீனாவும் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புடின் கடைசியாக பெப்ரவரி 2022 இல் சீனாவுக்கு விஜயம் செய்தார், படையெடுப்பிற்கு உத்தரவிடுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் பீஜிங்கில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.