;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமும் காற்றாலை திட்டமும்!! (கட்டுரை)

0

30 ஆகஸ்ட் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக ஜக்கிய நாடுகள் சபையினால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுயுத்தம் காரணமாக பல உயிர்களை இழந்தும் காணாமல் ஆக்கப்பட்டும் காணப்படுகின்றது.

எதிர்காலத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவுள்ள நிலமைகளை தடுத்தலும், எதிர்த்தலும் வேண்டும். குறிப்பாக காற்றாலை மின் உற்பத்திகளை சரியான இடங்களில் நிறுவாமல் மக்கள் குடியிருப்புக்கள், வனவிலங்கு காடுகள், சதுப்புநிலங்களுக்குள் அமைக்கப்படுவதால் அனைவரும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடச்சியாக நடைபெறும் சட்டவிரோத கனியவள அகழ்வு இல்மனைட், ரைட்ரானியம் போன்ற கனியவள அகழ்வினாலும் எதிர்காலத்தில் காணாமல் ஆக்கப்படவுள்ள இடங்கள் தொடர்பாக பிரதேச மக்கள் அவதானிப்புடன் செயற்படுதல் வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளுக்கான அதிகாரங்கள்
இலங்கையில் உள்ளுராட்சி சபைகளின் அனுமதினைப் பெறாமல் எந்தவொரு கட்டுமானத்தினையும் மேற்கொள்ள முடியாது என கூறப்படுகின்றது. அமைச்சரவை அனுமதி உடன் நிறுவப்படும் செயற்பாடுகளுக்கு உள்ளுராட்சி சபைகளின் அனுமதிகள் கிடைக்காவிட்டால் மேற்கொள்ள முடியாது. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டம் மற்றும் கனியவள மண் அகழ்வு தொடர்சியாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அமைச்சரவை அனுமதியுடன் எந்ததிட்டங்களையும் மேற்கொள்ள முடியுமா?
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு குறித்த பிரதேச மக்களின் விருப்பம் பெறப்பட்டால் மாத்திரமே செயற்படுத்த முடியும். பிரதேச மக்கள் விருப்பங்கள் பிரதேசத்தில் உள்ள கிராமிய அமைப்புக்கள் ஊடாக பிரதேச செயலளரினால் உறுதிப்படுத்தப்பட்டு எவ்வித எதிர்ப்புக்களும் இல்லை என்றால் நடைமுறைப்படுத்த மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு முடியும். இதில் கட்டாயம் பிரதேச சபைகளின் அனுமதிகள் முக்கியமானது. இலங்கையில் உள்ளுராட்சி சபைகளின் அனுமதினைப் பெறாமல் எந்தவொரு கட்டுமானத்தினையும் மேற்கொள்ள முடியாது.


பல்தேசிய கம்பனிகளினால் ஏற்படபோகும் ஆபத்துகள்

பல்தேசிய கம்பனிகள் மேற்கொள்ளும் செயற்பாட்டின் விளைவுகளுக்கும் பிரச்சனைகளினையும் கோப் மற்றும் கோபா குழுவிற்கு கொண்டு செல்ல முடியாது ஏனெனில் தனியார் கம்பனிகள் என்பதனால் இருப்பினும் அனுமதிகள் தொடர்பில் நடைபெற்ற முறைகேடுகள் சுரண்டல்களினை கோப் மற்றும் கோபா குழுவிற்கு கொண்டு செல்ல முடியும். இருப்பினும் கோப் மற்றும் கோபா முடிவுகள் எடுக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதால் மீள ஏற்படாது அல்லது நிறுத்துவதற்கு சட்ட நடவடிக்கைகள் மூலம் முடியும்.

பல்தேசிய கம்பனிகள் எவ்வாறு நிதியினை பெறுகின்றன

IFC, ADB, JICA, உள்ளக வங்கிகள்,உலகவங்கி மற்றும் ஜக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள சில நிறுவனங்களின் ஊடாக பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக பாரியளவிலான கடன் மற்றும் முதலீட்டினை மேற்கொள்கின்றனர். சாதாரண மக்கள் தமது சேமிப்பினை தனியார்வங்கிகளில் வைப்பிலிட்டு இருப்பார்கள் இது கூட இவ்வாறான பல்தேசிய தனியார் கம்பனிகளுக்கு சாதகமே.


மதப்பிரச்சனைகளும் சமாதான நடவடிக்கையும்

சமாதானம் மற்றும் மத முரண்பாடுகளை குறித்த பிரதேசங்களில் ஏற்படுத்தி அல்லது சமாதான திட்டங்கள் நல்லிணக்கம் என்ற விடயங்களுக்குள் மக்களை ஆழ்த்தி தங்கள் முதலீடுகளை கம்பனிகள் மேற்கொள்கின்றன. இளைஞர்களின் சிந்தனை ஆற்றலினை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளும் முக்கியமானவையே. பல நாடுகளில் இன்றும் பூர்வீக குடிமக்கள் போதைகள் ஊடாக அழிக்கப்பட்டுள்ளமையும் முக்கியமானவையே.

சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் சுரண்டல்களுக்கு

நாட்டின் தற்போதைய பொருளாதார மந்தநிலை என்பது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட தொன்றாகும். இதன்ஊடாக தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ள பல்தேசிய கம்பனிகள் மற்றும் தனியார் கம்பனிகளுக்கு இலகுவான வழிகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைதல் என்பவற்றிற்கு இவ்வாறான செயற்பாடுகள் முக்கியமானவை. மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் உட்படுத்தினால் அவர்களின் சிந்திக்கும் ஆற்றலினை திசைதிருப்புதல் முக்கியமானது. சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெருவிக்காக சமூதாயத்தினை உருவாக்குவதே இவர்களது நோக்கம். வளங்களை சுரண்டி அழித்தபின்னர் வேறுபிரதேசங்களை நோக்கி செல்வார்கள்.

அமைக்கப்பட்டுள்ள, அமைக்கப்படவுள்ள 56GW காற்றாலை செயற்திட்டமானது இலங்கைக்கு வருமானமா?

பல்தேசிய கம்பனிகளுக்கும் இந்தியாவிற்கும் வழங்குவதால் கூடியளவிலான வருமானத்தினை கடன் கழிப்பிற்கு உட்படுத்த வேண்டிவரலாம். நாட்டின் கனியவளங்களை வெளிநாட்டவர்கள் ஆய்வுசெய்வதால் எதிர்காலத்தில் பிரதேச மக்கள் தமது பூர்வீகங்களை இழக்க வேண்டிவரும். அரசாங்கங்கள் காற்றாலை திட்டத்தினை ஊக்குவிக்க வரிச் சலுகைகளை வழங்குகின்றன. இதனுடாக பாரிய வருமானங்களை கம்பனிகள் பெறுகின்றன. தமது கம்பனிகளின் மின்சார செலவினை குறைத்து பாரிய இலாபத்தினை நாட்டின் வருமானத்தினை சுரண்டும் தன்மையே காணப்படுகின்றது.

இருப்பினும் நாட்டின்தேவைக்கு ஏற்ப நிறுவுதல் மக்கள் குடியிருப்பு அற்ற பிரதேசங்களில் நிறுவுதல் செயற்றிட்டங்களுக்கு நன்மை பயக்கும்.

நகர அபிவிருத்தி சபையின் குடிமனைகளுக்கான முதலீடுகள் போன்று காற்றாலை திட்டத்தினை அரசாங்கம் மேற்கொண்டால் மக்கள் முதலீடுகள் மேற்கொள்வார்கள் வெளிநாடுகளில் உள்ள மக்கள் முதலீடு மேற்கொள்வார்கள். பிரதேசத்திலுள்ள கிராமிய அமைப்புகளின் நிதிகள் சங்கங்கள் நிதிகள் முதலீடக்கூடியதாகும். இருப்பினும் சாதாரன அளவீலாவது கிராம சங்கங்கள் பங்குகளை வாங்குவதால் வருமாணம் கிடைக்கப்பெறலாம்.

காற்றாலை விசையாழிகள் இருப்பதை நீங்கள் விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், புவி வெப்பமடைதலுக்கு எதிரான நமது போராட்டத்தில் இந்தத் தொழில்நுட்பம் முக்கியமானது. காற்றிலிருந்து அதிக சக்தியை உருவாக்குவதன் மூலம், புதைபடிவ எரிபொருட்களை உட்கொண்டு பூமியை மாசுபடுத்தும் வழக்கமான மின் உற்பத்தி நிலையங்களை நம்பியிருப்பதைக் குறைக்க முடியும்.

காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் அதிக ஆபத்தினை கருத்திற்கொண்டு முக்கிய ஆறு கோரிக்கைகள்

காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள் சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் அதிக ஆபத்தினை கருத்திற்கொண்டு முக்கிய ஆறு கோரிக்கைகள் ‘இடர் ஆபத்துக் குறைப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு புதுப்பிக்கத்தக்க சக்தி காற்றாலை திட்டத்தின் போது..

1. சகல பிள்ளைகளுக்கும் அனைத்து நேரங்களிலும் பாதுகாப்பான சூழலில் தொடர்ந்தேர்ச்சியாக கல்வி கிடைக்க வேண்டும்.

2. இடர் முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றுத்துக்கு இசைவாக்கமடைதலுக்காக திட்டங்களை தயாரிக்கும் போது பிள்ளைகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

3. அனைத்து அபிவிருத்தி வேலைகளும் நிலைபேறானவையாக இருக்க வேண்டும்.

4. இடர் முன்னெச்சரிக்கை முறைமைகளை விருத்தி செய்யும் செயற்பாட்டில் சிறுவர்கள் பங்கேற்க வேண்டும்.

5. இடர் நிலைமைகள் மற்றும் அவசர எதிர்ச்செயலாற்றலின் போது அனைத்து சிறுவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

6. அனர்தத்தினால் பாதிக்கப்படுகின்ற அனைத்து குடும்பங்களுக்கும் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து நிதி ஆதரவு கிடைக்க வேண்டும். 

Common / Eurasian crane (Grus grus) flock flying close to wind turbine, Near Diepholz, Lower Saxony, Germany, October 2009

மன்னாரில் காற்றாலைகள் செயற்றிட்டங்களால் அழியும் தருவாயில் சுற்றுலாத்துறை?!! (PHOTOS)

இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? 24.08.2023 நடந்தது என்ன? (PHOTOS, VIDEOS)

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)

மக்களின் கோரிக்கைக்கு பதிலளித்த மன்னார் மாவட்டச் செயலாளர்; Hiruras Power Private LTD கம்பனிக்கு கடிதம்.!! (PHOTOS, VIDEOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.