ஏற்றுமதி வருமானம் 10.3 வீதத்தால் வீழ்ச்சி !!
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுக்குள் ஏற்றுமதி வருமானமானது 10.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
6,891 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளது.
பெட்ரோலிய உற்பத்திகள் சார்ந்து ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.