யாழ்மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
அலுவலகத்தில் பெயர்ப்பலகை, நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்கா,யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன்,
யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.