பல்லடம் அருகே 4 பேர் படுகொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு- கால் முறிந்த நிலையில் சிகிச்சை!!
பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வெங்கடேஷ் உள்பட மேலும் இரண்டு பேரை போலீசார் தேடிவந்தனர். போலீசார் தேடிவந்த நிலையில் வெங்கடேஷ் உள்பட இருவர் நேற்று திருப்பூர் மாவட்ட வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
வெங்கடேஷ் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு போலீசார், அவரை அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசார் மீது மண்ணைத் தூவி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் போலீசார் வெங்கடேஷ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது நான்கு குண்டுகளில் இரண்டு குண்டுகள் காலில் பாய்ந்தது. இதில் இரண்டு கால்களும் முறிந்தன. கால் முறிந்து காயம் அடைந்த வெங்கடேஷை பல்லடம் மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.