;
Athirady Tamil News

சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை கட்டிலோடு 20 கிலோ மீட்டர் சுமந்து சென்ற அவலம்!!

0

ஆந்திர மாநிலம், பத்ராத்ரி மாவட்டம், போதனில்லி அடுத்த கோர்கடாபாடு பழங்குடி இன கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. மலையில் இருந்து கீழே வருவதற்கு சாலை வசதி இல்லை. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் படுக்க வைத்து தோளில் சுமந்து சென்றனர். மலையின் குறுக்கே செல்லும் ஓடையை கடந்து மலை அடிவாரத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சத்திய நாராயணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி வந்தனர். அங்கு கர்ப்பிணி பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பத்ராசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.