யாழில் கசிப்பு உற்பத்தி தொழிலகம் முற்றுகை ; 600 லீட்டர் கோடா, கசிப்பு கைப்பற்றல் ; கட்சி முக்கியஸ்தர் கைது!! (PHOTOS)
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (08) கைப்பற்றப்பட்டதோடு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வத்திராயன் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி தொழிலகம் ஒன்று இயங்கிவருவதாக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றிரவு குறித்த உற்பத்தி நிலையம் மருதங்கேணி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது நான்கு கொள்கலன்களில் 600 லீட்டருக்கு மேற்பட்ட கோடா மற்றும் கசிப்பு, கசிப்பு வடிப்பதற்கு தேவையான பொருட்கள் என்பனவற்றை கைப்பற்றியதுடன், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக மருதங்கேணி பொலிஸ் நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட நபர் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.