பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் டொலர் நிதியுதவி : ரிஷி சுனக் !!
உலகில் ஏற்படும் பருவநிலை மாற்ற விளைவுகளை எதிர்கொள்ள இங்கிலாந்து 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி20 மாநாடு இன்று நிறைவடையும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே தவணையில் அளிக்கும் இந்த 2 பில்லியன் நிதி, பருவநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிதி பசுமை காலநிலை நிதியத்திற்கு (GCF) சென்றடையும். இந்த நிதியம் 194 நாடுகளுடன் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியமானது (GFC) ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளின் கீழ், காபன் உமிழ்வைக் குறைப்பதற்கும், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை உருவாக்குவதற்கும் மற்றும் வெப்பமயமாதலுக்கு ஏற்ப தங்கள் இலக்குகளை அடைய ஏழை நாடுகளுக்கு தேவையான பணத்தைச் சேர்ப்பதற்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டது