அரசு மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா!!
புதுவை லாஸ்பேட்டை மகளிர் அரசு பாலிடெக்னிக் கடந்த ஆண்டு அனைத்து இந்திய தொழில்நுட்ப அனுமதியுடன் அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியாக அரசால் தரம் உயர்த்தப்பட்டது. கல்லுாரியில் 4-ம் ஆண்டு பி.டெக்,, பொறியியல் பட்டப்படிப்புகளான கணினி அறிவியல்,மின் னணுவியல் மற்றும் தொடர்பு மின்னியல் மற்றும் மின்னணுவி யல், கட்டடக்கலை உத வியாளர், தகவல் மற் றும் அறிவியல் துறை உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. மேலும் கல்லுாரியில் சிறப்பு அம்சமாக 3 ஆண்டு வணிகவி யல் பட்டப்படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. கல்லுாரி சிறந்த உள் கட்டமைப்பு வசதிக ளையும், சிறந்த ஆய் வகம் மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களையும் கொண்டுள்ளது.
கல்லுாரியில் 2023-24 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா இன்று காலை கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராணி தலைமை தாங்கினார். தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன முனைவர் உஷா நடே சன்,சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மனிதவள துறை தலை வர் ரஜினி,பெருநிறுவன சமூக பொறுப்பு அதிகாரி மஞ்சுளாதேவி பங்கேற்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் அறிவுரைகளை வழங்கி வாழ்த்தி பேசினர். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.