பாசிட்டிவ் சிக்னல்: மவுனம் கலைத்த சீனா!!
டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜி20 டெல்லி பிரகடனத்தை ஒருமித்த கருத்தோடு இந்தியா சாதுர்யமாக வெளியிட்டது. ஒருமித்த கருத்தோடு பிரகடனம் வெளியிடப்பட்டது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இதற்கிடையே ஜி20 மாநாட்டின் பிரகடனம் குறித்து சீனா பதில் அளிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜி20 டெல்லி பிரகடனம் நேர்மறையாக சிக்னலை தந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சிறப்புமிக்க குழு உலகளாவிய் சவால்கள், உலக பொருளாதாரத்த மீட்டெடுப்பதை ஊக்குவித்தல் விவகாரத்தில் நேர்மறையாக சிக்னலை தந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.