;
Athirady Tamil News

பட்டுப்பாதைக்கு நிகராக இந்தியாவை உள்ளடக்கிய பாரிய திட்டம்: அதிருப்தியில் சீனா !!

0

சீனாவானது தனது கனவுத்திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆயத்தங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பண்டைய காலம் தொடக்கம் பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, ஆசியாவில் வணிகத்தில் முன்னிலை வகித்தது. இந்தப் பட்டுப் பாதை, அமெரிக்கா உலக வல்லரசாகிய பின், 1500ஆம் ஆண்டுவாக்கில், பட்டுப் பாதை திட்டம் பலவீனமடைந்து போனதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் அதேபோன்று ஒரு நவீன தடத்தை உருவாக்க, தற்போது சீனா முயன்று வருகிறது. சீனா இந்த திட்டத்தை 2008 இல் தொடங்கியது.

சீனாவின் பட்டுப் பாதை ஒப்பந்தங்களில் சில ஆசிய நாடுகள் (பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலைதீவு) கையெழுத்திட்டபோதும், பல நாடுகள் ஆர்வத்துடன் முன்வரவில்லை. ஆனால் இதில் சீனாவின் மிகப்பெரிய அரசியலும், சுயநலமும் இருப்பதாக உலக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், இவை அனைத்தையும் மறுக்கும் சீனா, அதைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சூழலில் தான் தற்போது டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது, இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் புதிய பொருளாதார வழித்தடத்துக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய அடிப்படை கட்டமைப்பு திட்டமாகும். இதன்மூலம் வர்த்தகம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வளர்ச்சி பெறும். இதை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் தொடங்கவுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இது மத்திய கிழக்கில் செழிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தம். இது, இரண்டு கண்டங்களின் துறைமுகங்களை இணைப்பதன் மூலம் மத்திய கிழக்கில் அதிக செழிப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய ஒப்பந்தம்” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்த திட்டம் சீனாவின் பட்டுப்பாதை முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

உலகின் பல்வேறு தலைவர்களும் இதை வரவேற்றுள்ள நிலையில், சீனா இத்திட்டத்தை விமர்சித்துள்ளது.

எனினும், இந்த விஷயத்தில் சீனா அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.