யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் சிறுமியொருவர் சடலமாக மீட்பு!!
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார்.
உயிரிழந்த சிறுமி திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பேத்தியார் மயக்க நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது,
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.