யாழில். துண்டிக்கப்பட்ட சிறுமியின் கை கொழும்புக்கு!!
சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் , மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் மன்றில் தெரிவித்தனர்.
அதனை அடுத்து , துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை பொலிஸார் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு , அது தொடர்பிலான அறிக்கையை பெறவும் மன்று உத்தரவிட்டு , வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு திகதியிட்டு ஒத்திவைத்தது.
சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணை – அங்கஜன்!!
கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நீதியான விசாரணை வேண்டும் – விக்னேஸ்வரன்!!!
எனது பேத்தியின் இந்த நிலைக்கு விடுதியில் இருந்த தாதியரின் அசண்டையீனமே காரணம்!! (VIDEO)