இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் : பேரதிர்ச்சியில் பாகிஸ்தான் !!
சமீபத்தில் இந்தியாவை தலைமையாக கொண்டு இடம்பெற்ற ஜி20 உச்சிமாநாட்டில், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இணைப்பு வழித்தடம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.
உலக நாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தமான கைசாத்தானது.
இதற்கான வழித்தடம் குறித்த அறிவிப்பு வீடியோவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளனர்.
இதுகுறித்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் சைஃப் பின் சையத் மாதிரி புகைப்படத்துடன் கூடிய காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இப்பதிவானது, பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.