’ராஜபக்ஷகளை தொடர்புடுத்தி திசை திருப்ப வேண்டாம்’ !!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் ராஜபக்சக்களை சம்பந்தப்படுத்தி விசாரணைகளை திசை திருப்ப இடமளிக்க வேண்டாம் என்று அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘இனவாதம் மற்றும் மதவாதத்தை, அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்த வேண்டாம். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.
இந்த தாக்குதல் தொடர்பில் இன்று பேசுபவர்கள் தாக்குதலுக்கு தேவையான திட்டமிடல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருவாக்கப்பட்டவை என தெரிவிக்கின்றனர்.
அவ்வாறானால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே இந்த தாக்குதல் நடைபெற்றது அதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சி அரசாங்கமே நாட்டில் ஆட்சியில் இருந்தது. அவ்வாறானால் அந்த ஆட்சியினரே அவர்களின் திட்டமிடலுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர்.
எனவே இந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் நாம் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளோம்” என்றார்.
ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியளித்த ஆசாத் மௌலானாவின் முழு பின்னணி!! (கட்டுரை)
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!