’சனல் 4 குற்றச்சாட்டுக்கு தெரிவுக்குழு அமைக்கவும்’ !!
சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) விசேட அறிவித்தலொன்றை வெளியிட்ட அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியின் ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இது தொடர்பானஅடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரிவுக்குழு அமைக்கப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்படும்.
இதற்கமைய தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதன்மூலம் ஜனாதிபதி ஆணைக்குழு, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆகியவற்றை பெற்று அவற்றை ஆராய்ந்து அவற்றை சாட்சிகளாக மாற்ற முடியுமென்றால் சட்டமா அதிபர் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.
ஈஸ்டர் தாக்குதல்: சேனல் 4 ஆவணப்படத்தில் சாட்சியளித்த ஆசாத் மௌலானாவின் முழு பின்னணி!! (கட்டுரை)
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? !!