பிரித்தானியாவில் ஏற்படவுள்ள மாற்றம் : அதிரடி காட்டும் ரிஷி சுனக் !!
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் எதிர்கால சந்ததியினர் சிகரெட் பிடிப்பதை மொத்தமாகத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, ரிஷி சுனக் விரைவில் சிகரெட் பிடிப்பதை மொத்தமாகத் தடுக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஜனவரி 1ஆம் திகதிக்குப் பிறகு பிறந்த ஒவ்வொருவரும் நியூசிலாந்தில் புகையிலை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ரிஷி சுனக், பிரித்தானியாவிலும் அவ்வாறான தடைகளை விதிக்க தீவிரமாக செயற்பட்டு வருகிறார் என தெரியவந்துள்ளது.
குறித்த நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், 2030ஆம் ஆண்டில் புகை பிடிக்கும் நபர்களே இல்லாத நாடாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் மக்களை ஊக்குவிக்க விரும்புகிறோம். இவற்றை மனதில் வைத்தே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என கூறியுள்ளார்.