திருகோணமலை வைத்தியசாலையில் இடம் பெற்ற பரபரப்பு சம்பவம்..!
திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று (01.10.2023) காலை ஆறு மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே இவ்வாறு தீப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடம் பெற்ற தீப்பரவல்
அங்கு சத்தமொன்று கேட்டதை அடுத்து இவ்வாறு தீ பரவல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்திய சாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.