காலாவதியான சட்னியைச் சாப்பிட்டதால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!
பெரும்பாலான மக்கள் உணவுடன் சட்னி சாப்பிட விரும்புகிறார்கள். ஒருவகையில் பலர் இதற்கு அடிமையாகி உள்ளனர். ஒவ்வொரு உணவிற்கும் அதற்கு ஏற்ற சட்னி அவசியம் உடன் இருக்க வேண்டும். அதற்காக ரெடிமேட் சட்னி/ சாஸ் வாங்கி சாப்பிடுகிறார்கள். இது தவறில்லை. சாப்பிடலாம்.ஆனால் அதில் கொஞ்சம் கவனம் தேவை இல்லையேல் அது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பிரேசிலில், ஒரு பெண்ணின் சிறிய கவனக்குறைவு ஒரு பெண்ணின் ஓராண்டாக முடக்கிப்போடும் அளவுக்கு விளைவுகளை உண்டாக்கியுள்ளது. கடையில் வாங்கிய சட்னி சாப்பிட்ட பிறகு, அவள் பக்கவாதம் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் கிட்டத்தட்ட இறக்கும் நிலை வரை சென்றுள்ளார். பல வாரங்களாக அவள் மருத்துவமனையில் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடியுள்ளார். அதற்கான காரணத்தை அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீங்கள் அத்தகைய தவறை நீங்கள் செய்யாமல் இருக்க முடியும்.
நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, பிரேசிலில் வசிக்கும் கார்னிரோ சோப்ரேரா கோஜ் சந்தையில் இருந்து பெஸ்டோ சாஸை வாங்கியுள்ளார். நசுக்கிய பூண்டு, ஐரோப்பிய பைன் பருப்புகள், உப்பு, துளசி இலைகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்யப்படும் சட்னி இது. சிலர் ஆட்டுப்பால் மற்றும் ஆலிவ் எண்ணெயையும் இதோடு சேர்க்கிறார்கள். இந்த பச்சை நிற சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
முதல் தடவை பார்த்தாலே ஏதோ கொத்தமல்லி சட்னி மாதிரி இருக்கு என்று சொல்லவைக்கும் பெஸ்டோ சாஸ் தான் அவரது வாழ்வாதரத்திற்கு எமனானது. டிசம்பர் 31, 2021 அன்று கோஜ் அருகில் உள்ள கடையில் சாஸை வாங்கியதாகவும், சில வாரங்கள் கழித்து ஜனவரி 2022 இன் பிற்பகுதியில் அதை சாப்பிட்டதாகவும் கூறினார். பெஸ்டோ சாஸ் பாட்டிலில் காலாவதி தேதி இல்லை அதோடு அவள் கடையில் அடிக்கடி வாடிக்கையாளராக இருந்ததால், அதை எப்படி சேமிக்க வேண்டும் என்று கடைக்காரரும் சொல்லவில்லை.
நாட்கள் கழித்து கோஜ் சட்னியை திறந்து பார்த்தபோது அதன் நிறமும் தரமும் பார்ப்பதற்கு நன்றாக இறந்தவுடன் அதை எந்த யோசனையும் இல்லாமல் சாப்பிட்டுவிட்டார். சாப்பிட்டவுடன், அவளுடைய உடல்நிலை மோசமடைய ஆரம்பித்துள்ளது. அவரே வண்டியை 20 கிலோமீட்டர் ஓட்டி மருத்துவமனையை அடைந்துள்ளார்.
ஆனால் அதன் பின்னர் செயலற்று போன கோஜ் காரை விட்டு வெளியே வரவே போராடியுள்ளார். அதன் பின்னர் வாந்தி எடுக்க ஆரம்பித்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அவளால் கை கால்களை அசைக்கக்கூட முடியவில்லை. எதையும் சொல்வதில் சிரமம் இருந்தது. நாக்கில் கூச்ச உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. டாக்டர்கள் உடனடியாக அவரை ஸ்கேன் செய்தனர். உடலின் பல பாகங்கள் வேலை செய்யாமல் இருப்பது தெரிய வந்தது.
போட்யூலிசம் எனப்படும் அரிய தொற்று:
அப்போது தான் அவருக்கு போட்யூலிசம் என்ற அரிய தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் படி, இது பொதுவாக உணவு விஷத்தால் ஏற்படுகிறது. சக்தி வாய்ந்த பாக்டீரியாக்கள் உடலின் நரம்புகளைத் தாக்கி, சுவாசிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. தசைகள் தளர்வடைகின்றன. இது பக்கவாதத்தையும் சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது.
கோஜிக்கும் அதேதான் நடந்தது. பெஸ்டோ காலாவதியானதால் அதில் பாக்டீரியா பரவியதால் உணவு விஷமாக மாறியுள்ளது பாக்டீரியா அவரது செரிமான அமைப்பை முற்றிலும் அழித்தது. மருத்துவர்கள் அவளுக்கு போட்யூலிசம் எதிர்ப்பு மருந்தைக் கொடுத்தனர், அதன் பிறகு தான் அவளால் பேச முடிந்தது. ஆனால் பல வாரங்களாக அவள் வாழ்வோடும் சாவோடும் போராடினாள்.
சட்னி காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்காத கவனக்குறைவாக அவளை இந்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது. பாட்டிலில் காலாவதி தேதியோ அல்லது வேறு குறிப்புகளோ எழுதப்படவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது. எனவே, நீங்கள் ரெடிமேட் உணவு பொருளை வாங்கும் போதெல்லாம், தயவுசெய்து காலாவதி தேதியை சரிபார்த்து, சாப்பிடுவதற்கு முன்னும் அதை சரிபார்த்து சாப்பிடவும். பல சமயங்களில் அதை வாங்கி வீட்டில் வைத்து நம்மை அறியாமலேயே காலாவதியாகிவிடும்.