;
Athirady Tamil News

ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் பெறுவோருக்கு எச்சரிக்கை..!

0

இலங்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் முறைகள் மூலம் அதிக வட்டிக்கு பணம் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் எந்தவித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்லைன் நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒன்லைன் முறைகள் மூலம் உடனடி கடன் வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு பாதிப்பு
இவ்வாறான நிறுவனங்களில் உடனடி கடன் பெற்ற சிலர் தாம் எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான முறையில் பணம் பெற்றவர்கள் நாளாந்தம் வட்டி செலுத்த முடியாத உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் பதிவாகி உள்ளன.

நிதி மோசடி
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையவழி முறைகள் மூலம் கடன் பெற்று அசௌகரியங்களுக்கு உள்ளானவர்கள் ஒன்றிணைந்து இணைய நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் வகையில் நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.