பிரித்தானியாவில் இறந்த கணவனின் குரலை ரயில் நிலையத்தில் கேட்டு மகிழ்ந்த மனைவி! சுவாரஸ்ய பின்னணி
பிரித்தானியாவில் பெண் ஒருவர் தன்னுடைய இறந்த கணவனின் குரலை கேட்க தினமும் ரயில் நிலையம் சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண்
பிரித்தானியாவில் மெக்கலமின் என்ற பெண்ணின் கணவர் ஆஸ்வால்ட் லாரன்ஸ் பிரபலமான பேக்ரவுண்ட் வாய்ஸ் கலைஞராக இருந்துள்ளார்.
இவர் கடந்த 1950ம் ஆண்டு பிரித்தானியாவின் அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்களுக்காக மைண்ட் தி கேப் (Mind the gap, please) என்ற எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றிக்காக தன்னுடைய வாய்ஸை கொடுத்துள்ளார்.
இந்த வாய்ஸை தான் லண்டனில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு ஆஸ்வால்ட் லாரன்ஸ் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மனைவி மெக்கலமின் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளார்.
அத்துடன் அவருடைய நினைவலைகளில் மூழ்கிய மெக்கலமின் தன்னுடைய கணவனின் குரலை கேட்பதற்காக தினமும் ரயில் நிலையம் சென்றுள்ளார்.
நிறுத்தப்பட்ட வாய்ஸ்
இவ்வாறு கணவரின் குரலை கேட்பதற்காக தினமும் ரயில் நிலையத்திற்கு மெக்கலமின் சென்று கொண்டு இருந்த நிலையில், திடீரென மெக்கலனின் கணவரின் குரல் நிறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ரயில் நிலைய ஊழியர்களிடம் அவர் விசாரித்த போது டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக பழையவை படிப்படியாக நிறுத்தப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் மெக்கலனின் உணர்வுகளை தினமும் பார்த்து வந்த ரயில் நிலைய ஊழியர்கள் அவரது கணவரின் குரல் பதிவின் நகலை அவருக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
பல கட்ட தேடுதலுக்கு பிறகு ஆஸ்வால்ட் லாரன்ஸ் குரல் பதிவு எம்பார்க்மென்ட் நிலையத்தில் மீட்டெடுக்கப்பட்டு மெக்கலனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தினமும் ஒவ்வொரு நிமிடமும் தன்னுடைய வீட்டிலேயே மெக்கலனின் தன்னுடைய கணவரின் குரலை கேட்டு வருகிறார்.
மெக்கலனின் காதல் கதை சமூக வலைதளங்களில் பரவி பெரும் ஆதரவை பெற்ற தோடு, புத்தகமாகவும் வெளியிட்டுள்ளனர்.