இன்று சமையல் எரிவாயு விலையில் மாற்றம்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலை
மாதாந்த விலை சூத்திரத்தின்படி, இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று (04.10.2023) நள்ளிரவு அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2,982 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 3,127 ரூபாவாகும்.
மேலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1,256 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.