மகிந்தவுக்கு எதிராக சதி செய்த பசில்: ரணிலுடன் இணைந்து போட்ட டீல்
அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவ்வப்போது சந்தித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதன் பின்னணியில் சமகால ஆட்சியை உறுதிப்படுத்தும் புதிய அணுகுமுறையின் ஆரம்பம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கள பத்திரிகை ஒன்று பசில் ராஜபக்சவுடன் நடத்திய கலந்துரையாடலில் திடீரென அறிவிக்கப்பட்டுள்ள உண்மைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
காலி முகத்திடல் போராட்டம்
காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபச்வுக்கு எதிரான கோஷசங்கள் அரசாங்கத்திற்குள் எழுந்ததாக பசில் தெரிவித்துள்ளார்.
மகிந்தவை பதவி விலக்குமாறு அதிகளவான அமைச்சர்கள் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போராட்டத்திற்கு முன்னரே கணிக்கப்பட்டுள்ளதாக பசில் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க
மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு கோட்டாபய நியமித்தமை சரியானது எனவும், பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு தற்போது ஜனாதிபதியாக செயற்படும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விகிரமசிங்கவின் வெற்றியின் மூலம் தனது அந்த முடிவு சரியானது என நிரூபிக்கப்பட்டதாக பசில் தெரிவித்துள்ளார்.
134 உறுப்பினர்களினதும் வாக்குகளை அவர் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் கட்சி முழுமையாக பசில் ராஜபக்ஷவின் தலைமை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.