கனடாவில் நிஜமாகவே பொழிந்த காசுமழை?
கனடாவின் தென்கிழக்கு கல்கரி பகுதியில் வீதியில் பெருமளவு நாணயத்தால்கள் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எப்பல்வுட் மற்றும் 68 ஆம் இலக்க வீதியில் இவ்வாறு பெருந்தொகையான பணம் வீதியில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
20 டாலர் பெறுமதியான நாணயத்தாள்கள் வீதியில் பெரும் எண்ணிக்கையில் கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பணத்தை சேகரிப்பதற்கு மக்கள் கூட்டம் குழுமியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
வீதியில் கிடந்த 20 டாலர் பெறுமதியான வீதியில் கிடந்த 5000 டாலர் பெறுமதியான 20 டாலர் நாணயத்தாள்களை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
இந்த நாணயத்தாள்கள் எங்கிருந்து கிடைக்கப் பெற்றன ? யார் இதை தொலைத்தார் ? போன்ற எந்த ஒரு விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நாணயத்தாள்களுக்கு சொந்தக்காரர் யார் என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.