உக்ரைனின் இலக்கு தொடர்பில் ஆய்வாளர்களின் அதிர்ச்சி தகவல்..!
உக்ரைன் எதிர்காலத்தில் ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யாவுடனான உக்ரைனின் யுத்தமானது முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணேமே காணப்படுகின்றது.
இந்நிலையில், ஆயுதப் பற்றாக்குறை ஏற்படுமாயின் ரஷ்யாவுடனான போரைத் தொடர முடியாது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆய்வாளர்களின் கேள்வி
ரஷ்யாவுடனான போரைத் தக்கவைக்க உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா காணப்படுகிறது.
ஆனால், அந்நாடு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் நிலையில், எவ்வளவு காலம் இந்த உதவிகளை வழங்க முடியும் என ஆய்வாளர்கள் மேலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.