;
Athirady Tamil News

பிரித்தானிய ராணியாரை கொல்ல விண்ட்சர் மாளிகையில் அத்துமீறிய இந்திய இளைஞர்: வெளிவரும் புதிய தகவல்

0

லண்டனில் நவீன வில் அம்பு ஆயுதத்துடன் எலிசபெத் ராணியாரை கொல்லும் நோக்கில் விண்ட்சர் மாளிகையில் அத்துமீறிய இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நவீன வில் அம்பு ஆயுதத்துடன்
கடந்த 2021 டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் நாளில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. விண்ட்சர் மாளிகையில் அத்துமீறிய 21 வயது ஜஸ்வந்த் சிங் சைல் என்பவரை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு கைது செய்திருந்தனர்.

நவீன வில் அம்பு ஆயுதத்துடன் கருப்பு உடை அணிந்து கொண்டு, ராணியார் இரண்டாம் எலிசபெத்தை கொல்லும் நோக்கில் விண்ட்சர் மாளிகையில் நுழைந்துள்ளார். இதை விசாரணையின் போது அதிகாரிகளிடம் அந்த இளைஞர் தெரிவித்திருந்தார்.

சம்பவம் நடக்கும் போது, ராணியார் விண்ட்சர் மாளிகையில் தங்கியிருந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. பகல் 8.10 மணியளவில் விண்ட்சர் மாளிகையில் பணியில் இருந்த இரு அதிகாரிகள் குறித்த இளைஞரை முதலில் கண்டுள்ளனர்.

விசாரித்ததில், ராணியாரை கொல்ல தாம் வந்துள்ளதாக அந்த அதிகாரிகளிடம் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள், உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

ஒடுக்குமுறைகளுக்கு பழி வாங்க
விண்ட்சர் மாளிகையில் கைதாகும் முன்னர் காணொளி ஒன்றை பதிவு செய்து, ராணியாரை கொல்லப் போவதாக குறிப்பிட்டு, தமக்கு தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் உளவியல் பாதிப்பு கொண்ட நபராக பின்னர் வழக்கு பதியப்பட்டது. விரிவான விசாரணையில், இளைஞர் ஜஸ்வந்த் சிங் டிசம்பர் 23ம் திகதியே விண்ட்சர் மாளிகை நோக்கி புறப்பட்டதாகவும், இந்திய மக்களுக்கு எதிராக பிரித்தானிய சாம்ராஜ்யம் முன்னர் மேற்கொண்ட ஒடுக்குமுறைகளுக்கு பழி வாங்கவே ஜஸ்வந்த் சிங் முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனாலையே, ராணியாரை கொல்ல அந்த இளைஞர் முயன்றுள்ளார். மட்டுமின்றி, பிரித்தானிய ராணுவத்தில் இணைந்து, அதன் பின்னர் அரச குடும்பத்தை நெருங்க திட்டமிட்டதும், ஆனால் அதில் ஏமாற்றமே மிஞ்சியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கின் முழு விசாரணையும் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, அக்டோபர் 5ம் திகதி நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை காலத்தின் ஒருபகுதி உளவியல் காப்பகத்தில் சிகிச்சை மேற்கொள்ளவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.