;
Athirady Tamil News

கனடா வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

0

கனடா வேலைவாய்ப்பு தொடர்பில் அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் முக்கியமான அறிவித்தலொன்றினை வழங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனேடிய பொருளாதாரத்தில் 65000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.5 வீதம் என்ற அடிப்படையில் காணப்படுவதாகவும் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இந்த நிலைமை பேணப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்வித்துறைசார் வேலைவாய்ப்புக்கள்
மேலும், கல்வித்துறையில் அதிக அளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பகுதிநேர வேலை வாய்ப்புகளே அதிக எண்ணிக்கையில் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, சனத்தொகை அதிகரிப்பு வலுவான நிலையில் காணப்படுவதனால் மாதாந்தம் தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.