;
Athirady Tamil News

யாழில் ஆலயத்தை பார்க்கின்ற வகையில் புத்தர் சிலை

0

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதியானது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் தமது பகுதியில் குடியேற முடியாத சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வெளி நாடுகளுக்கும் வேறு பகுதிகளுக்கும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அந்த பகுதியானது இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட நிலையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் அப் பகுதியில் உள்ள ஞான வைரவர் ஆலயத்திற்கு முன்பாக ஒரு அரச மரம் உள்ளதுடன் அந்த அரச மரத்தின் கீழ், ஆலயத்தை பார்க்கின்ற வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 40 ஆண்டுக்கு முன்னர் புலம்பெயர்ந்து சுவிஸிற்கு சென்றுவிட்டு, எமது காணிகளை பார்ப்பதற்காக வந்துள்ளோம். இந்த ஞானவைரவர் ஆலயம் எங்களது குல தெய்வம்.

இந்த ஆலயத்திற்கு சற்று தள்ளி முன் பக்கமாக ஒரு ஆலமரம் மாத்திரமே நின்றது. ஆனால் தற்போது ஆலயத்தின் முன் பக்கமாக தற்போது அரச மரம் உள்ளதுடன், அதன் கீழ் புத்தர் சிலையும் உள்ளது.

இது நாங்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னர் நாட்டப்பட்ட மரமாகத்தான் இருக்க முடியும்” என தெரிவித்தனர். அந்த பகுதியில் இருந்த இராணுவத்தினர் தமக்கு வழிபட வேண்டிய தேவை இருந்தால் புத்தர் சிலையை வேறு ஒரு இடத்தில் வைத்து வழிபட்டிருக்க முடியும்.

ஆனால் அவர்கள் ஆலயத்திற்கு முன்பாக அரச மரத்தினை வைத்து வளர்த்து, அதன் கீழ் புத்தர் சிலையை வைத்துள்ளமை மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.