மேலும் இரு தினங்களுக்கு மூடப்படும் மாவட்டமொன்றின் பாடசாலைகள்: இன்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மேலும் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம்
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ஆகியோர் தலைமையில் இன்று (07.10.2023) மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பாடசாலைகளை மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த ஐந்தாம் மற்றும் ஆறாம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.