இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தின் தலைமை பதவியை ஏற்கும் இலங்கை
உயர்மட்டக் கூட்டத்தை தொடர்ந்து, எதிர்வரும் 11ஆம் திகதி இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் தலைவர் பதவியை இலங்கை ஏற்கவிருக்கிறது.
1997 இல் நிறுவப்பட்ட இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேசன் ஆனது இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
இந்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள், கொழும்பில் நடைபெறும் பங்கேற்கவுள்ளன.
16 அமைச்சர்கள் பங்கேற்பு
தற்போதைய தலைவராக பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன், பதவி வகிக்கும் நிலையில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சபையின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 16 அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அவர்களில் பங்காளதேச வெளியுறவு அமைச்சர்; ஏ.கே. அப்துல் மொமன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், மொரீஸியஸின் வெளியுறவு அமைச்சர் மனீஸ் கோபின், மலேசியாவின் அமைச்சர் டத்தோஸ்ரீ டிராஜா ஜாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் அமைச்சர் நலேடி பாண்டோர் உள்ளடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.