சீரற்ற காலநிலை: நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சீரற்ற காலநிலையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எலிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய்
மேலும் வெள்ள நிலைமையால் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.