இஸ்ரேலின் அதிபயங்கர தாக்குதல்: சுக்குநூறாய் சிதையும் காசா நகரம்: பரபரப்பு வீடியோ
ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான மோதலில் உச்சகட்டமாக காசா பகுதியில் நெருப்பு கோலமாக காட்சியளிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் சூளுரை
இஸ்ரேலிய படைகளுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் அதிதீவிர நிலையில் அடைந்துள்ளது. இஸ்ரேலின் ஒட்டுமொத்த படையும் எல்லையில் குவிக்கப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் தனது ராக்கெட் மூலம் சிதைத்து வருகிறது.
#Israel will “do anything” to get hostages back from Gaza, military official tells CNN
“We have men, women, children and grandmothers sitting in Gaza in some basement,” Spielman said during an interview in Sderot, Israel.
“What I can tell you is that we’re not going to stop… pic.twitter.com/auBELiatlw
— NEXTA (@nexta_tv) October 8, 2023
இஸ்ரேல் ராணுவ அதிகாரி CNN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், காசா பகுதியில் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய மக்களை மீட்க இஸ்ரேல் எதையும் செய்யும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னால் இப்போது என்ன சொல்ல முடியும் என்றால், நாங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்த போவது இல்லை, இதற்கு பின்னால் உள்ள ஒருவரையும் விட்டு வைக்கப்போவது இல்லை என்பதை மட்டும் தான் எனத் தெரிவித்துள்ளார்.
சிதையும் காசா நகரம்
இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கான மின் இணைப்பை இஸ்ரேல் முழுவதுமாக துண்டித்துள்ளது.
This is what the Gaza Strip looks tonight
UPD: the fireworks video is not from Gaza. We’ve decided to take it down. pic.twitter.com/hKXNKpAuyc
— NEXTA (@nexta_tv) October 8, 2023
அத்துடன் காசா நகரம் மீது அடுக்கடுக்கான ஏவுகணை ஏவி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது, இதன் மூலம் ஒட்டுமொத்த காசா நகரமும் தீ பிழம்புகளாக காட்சியளிக்கிறது.
இது தொடர்பாக வீடியோ காட்சி வெளியாகி உலக நாடுகளில் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.