இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்குமென எச்சரிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்ககூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்த 01-10-2023 திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்திருந்தது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 365 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன், புதிய விலை 351 ரூபாவாகவும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 421 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, இரஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான யுத்ததால் மீண்டும் எரிபொருள் விலைகள் இலங்கையில் உயர்வடையும் எனவும் இது இலங்கையின் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.