;
Athirady Tamil News

வாகனம் தவிர்ந்த அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடை நீக்கம்! சற்றுமுன் வெளியாகிய வர்த்தமானி

0

வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (09) முதல் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கனரக வாகன இறக்குமதி
எனினும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம், கடந்த ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று பொது போக்குவரத்து பேருந்துகள், தாங்கிகள், பவுசர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட சிறப்பு நோக்கத்திற்காக கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தியது

மேலும், தடைசெய்யப்பட்ட காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் துறைமுகங்களில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் கனகர வாகனங்களை விடுவிக்கவும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இலங்கை கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச்சில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகளை முதல் முறையாக சிறிலங்கா அரசாங்கம் தளத்தியிருந்தது.

இந்த நிலையில் பயணிகள் வாகனங்கள் மீதான இறக்குமதித் தடைகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை எனவும் சிறிலங்கா நிதி அமைச்சு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.