இலங்கை – மலேசியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் காதிருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கொழும்பில் இருதரப்பு சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து சந்திப்பில் கலந்துரையாடியுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 11ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள 23ஆவது இந்தியப் பெருங்கடல் வலய மாநாடு (IORA) சபைக் கூட்டத்தில் (COM) கலந்துகொள்வதற்கு முன்னதாக மலேசிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இருதரப்பு சந்திப்பு
மேலும், அவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்ததுடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்க உள்ளார்.
மலேசிய வெளிவிவகார அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக இலங்கை வர்த்தக சமூகத்துடன் ஒத்துழைப்பு மிக்க அமர்வையும் நடத்தவுள்ளார்.