;
Athirady Tamil News

காவிரி நீரை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

0

காவிரி நீரை எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம்
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர கர்நாடக அரசு மறுப்பதால், டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களாக பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்காததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு பல முன்னெடுப்புகளை நீரை பெற்றுத் தருவதில் எடுத்து வருகின்றது.

அந்தவகையில் நேற்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். விவாதத்திற்கு பிறகு, காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவைக்கான மட்டுமல்ல – மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி நீர் அதனைத் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தருவதில் எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டுப் பெற்றுத் தருவோம்.

ஒன்றிய அரசானது, இதில் முறையாகச் செயல்பட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் தி.மு.க. அரசு தொடர்ந்து உறுதியாக எடுக்கும்” என பதிவிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.