இடி, மின்னலுடன் கூடிய கன மழை : 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை 12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் இன்று (10) இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.
இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை, கேகாலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்
எனவே, பொதுமக்கள் இடி,மின்னல்த் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய 12 மாவட்டங்கள் பெயரிடப்பட்டுள்ளன.