தீவிரமடையும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் – பலி எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியது!
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உயிரிழப்பு மூவாயிரத்தை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்களும், ஏராளமான அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும் உயிரிழந்தனர். பல பெண்களை இருசக்கர வாகனங்கள், கார்களில் வைத்து கடத்தினார்கள். மேலும், வீடு வீடாகச் சென்று பலபேரை கொன்று குவித்தனர்.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் உயிரிழப்பு என்பது உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று நடந்த 4வது நாள் தாக்குதலோடு 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்த 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 3,000-த்தை தாண்டியுள்ளது.