;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும்

0

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்கி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.11 மணிக்கு ஹெராத் மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் தகவல் உடனடியாக வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.