உரிமத்தை இழக்கும் இக்கட்டில் மதுபானசாலைகள் : நிலுவைத்தொகையினை செலுத்த காலக்கெடு விதிப்பு
நிலுவைத் தொகையினை செலுத்தாமல், போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையின் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த நிறுவனங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னதாக வரி நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களத்தில் பொதுக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமதக் கட்டணம்
உரிய வரிகளை குறிப்பிட்ட நேரத்தில் அறவிடவில்லை என தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் மதுபான சாலைகளின் நிலுவைத்தொகை கணக்கெடுப்புக்கள் எடுக்கப்பட்டன.
அதன்படி, மொத்த நிலுவைத் தொகை 6.2 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 2.5 பில்லியன் ரூபாய் வரி நிலுவைத் தொகையாக கணக்கிடப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 3.8 பில்லியன் ரூபா தாமதக் கட்டணமாக இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.